தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டி: கட்காரி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அந்தக் கட்சி தீவிரமாக முயன்றது. ஆனால், கூட்டணியில் பாஜவை சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. மேலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கவும் அக் கட்சி முயன்றது. அவர்களும் கண்டுகொள்ளவி்ல்லை.
இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அக் கட்சியின் தேசியச் செயலாளர் முரளிதர் ராவ் சில தினங்களுக்கு முன் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தனித்துப் போட்டியிட வேண்டிய நிலையில் பாஜக இருப்பது குறித்து விவாதி்க்கப்பட்டது.
இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய நிதின் கட்காரி, தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். வரும் 29ம் தேதி தாமரை யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க சென்னை செல்லும்போது இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications