5 மாதத்தில் திமுகவினர் இன்னல்களை சந்திப்பர்-விஜயகாந்த்
விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அங்கு விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, அப் பகுதி பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்
கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது.
உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள திமுகவினர் இன்னும் 5 மாதம் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதியின் ஆட்சியில் வெங்காயம் என்ன விலை?. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?
நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன்?.
ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை?.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம்.
வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பினால் நான் விழுப்புரத்தில் போட்டியிடவும் தயார். தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி (விழுப்புரம் பொன்முடியும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது) முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன்.
பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி நிலை உள்ளது என்றார் விஜய்காந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications