ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அடிக்கல் நாட்டினார்.
நமது நாட்டின் சுந்திர போராட்டத்தில் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களது ரத்தம் சிந்தி, போராடி சுதந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதில் ஒன்டிவீரர் முக்கிய தியாகி ஆவார்.
இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவருக்கு மணி்மண்டபம் கட்ட வேண்டும் என கடந்த பல வருடங்களாவே பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 50 லட்சம் செலவில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே கட்ட உள்ளது. இதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை நடைபெற்றது.
விடுதைலப்போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபத்திற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதின்கான், பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications