சபரிமலை- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை தர வேண்டும்-விஜயகாந்த் கோரிக்கை
மதுரை: சபரிமலையில் பலியான ஐயப்ப பக்தர்கள் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சபரிமலையில் நடைபெற்ற மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் ஆவலுடன் மகர ஜோதியைக் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி திடுக்கிட வைத்துள்ளது.
விபத்து நடந்து பல உயிர்கள் போன பிறகு நீதி விசாரணை நடத்துவதும், காவல்துறை புலனாய்வு மேற்கொள்வதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதும் ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுத் தராது.
பல குடும்பங்கள் இவற்றால் நிரந்தர துயரங்களுக்கும், வறுமைக்கும் ஆளாக வேண்டி வரும். எனவே, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது அரசு வேலை கொடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அறிந்து முன் கூட்டியே வழிகளை அதிகப்படுத்தியும், அகலப்படுத்தியும் முறையான வேலிகள் அமைத்தும் முறைப்படுத்தி இருக்கலாம்.
மேலும், கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கையை அனுமதி சீட்டுகள் வழங்குவதன் மூலம் இத்தகைய தாறுமாறான நெரிசலை தவிர்த்து ஒழுங்காக, வரிசையாக பக்தர்களை அனுப்பியிருக்கலாம்.
திருப்பதி போன்ற திருத்தலங்களில் மக்கள் கடவுளை தரிசிக்கும் வகையில் முறைப்படுத்தி இருப்பது நினைவு கொள்ளத் தக்கது.
கேரள அரசும், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் முன் கூட்டியே மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
இனி வரும் காலத்திலாவது ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications