திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெருவெங்கும் கொலை நடக்கும்-வளர்மதி
பண்ருட்டி: ஒரு முறை திமுகவுக்கு ஓட்டு போட்டதற்கே நிறைய கஷ்டம். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தெருவெங்கும் கொலை, கொள்ளைதான் நடக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் பா. வளர்மதி.
பண்ருட்டியில் நடந்த அதிமுக கூட்டத்தில் வளர்மதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. உயிர் வாழ எப்படியாவது பொருள்களை வாங்கியாக வேண்டும் என்ற சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கொலைகள், கொள்ளைகள் நடக்கின்றன.
ஒரு முறை ஓட்டு போட்டதற்கே இந்த கஷ்டம், மறுமுறை இவர்கள் வந்தால் தெருவெங்கும் கொலை, கொள்ளைதான் நடக்கும். எனவே கொள்ளைக் கூட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக அரசு அளிக்கும் இலவசத்தை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றார் வளர்மதி.












Click it and Unblock the Notifications