ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி கிப்ட் செக் வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி பரிசு்ப் பொருள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 1992-ம் ஆண்டு அவர் பிறந்த நாளைக் கொண்டாடியபோது, அவருக்குப் பரிசாக ரூ. 2 கோடிக்கு கிப்ட் செக்குகள் வந்தன. இதை அரசுக் கருவூலத்தில் அவர் சேர்க்கவில்லை. மாறாக தனது வங்கிக் கணக்கில் சேர்த்தார்.
இதையடுத்து ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மூன்று பேருமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜரானார். ஜெயலலிதா தரப்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட இருப்பதால் மற்றொரு நாளுக்கு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
மேலும், செங்கோட்டையன் தரப்பில் கூறுகையில், ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்த பிறகே தங்கள் தரப்பில் வாதிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு சிபிஐ வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு கருத்தையும் கேட்ட பின்னர் ஜனவரி 31ம்தேதிக்கு வழக்கை நீதிபதி பழனிச்சாமி ஒத்திவைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications