காஞ்சீபுரம் அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: சிறுபான்மை, மீனவர் பிரிவுக்கு புதிய நிர்வாகிகள்
சென்னை: காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் என்று நீக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுபான்மை பிரிவு, மீனவர் பிரிவு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தென் சென்னை மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக இருக்கும் டி.ரமேஷ் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு அ.தி.மு.க. மாநில மீனவர் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பி.பிரபு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கஜா என்ற கஜேந்திரன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பிலும், கூடலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் அ.மில்லர், வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் ஐ.எஸ்.இன்பதுரை, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நிலப்பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எம்.பஹீம், மதுரை புறநகர் மாவட்ட சிறுபன்மையினர் நிலப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான் மகேந்திரன், விருதுநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் எச்.சித்திக் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு தலைவராக ஏ.ஜஸ்டின் செல்வராஜ், துணை தலைவர்களாக சிந்தை எ.எம்.டி. இஸ்மாயில், எச்.சித்திக் ஆகியோரும், செயலாளராக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவும், இணை செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் எஸ்.நாகூர் மீரான், எஸ்.எம்.அப்துல் ஜலீல் ஆகியோரும், துணை செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் மில்லர், வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி. பிரபாகர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, எம்.எம்.பஹீம் ஆகியோரும், பொருளாளராக டி.ஜான் மகேந்திரன் ஆகியோரும் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications