அண்டை மாநிலத்தவர் வாங்கியுள்ள நிலத்தில் பயிர் செய்யுங்கள்-ராமதாஸ் அழைப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவருமான பி.ஜே.ஏழுமலை-மதுமிதா ஆகியோரால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரூபிகா திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று விவசாயம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நஷ்டப்படுகின்றனர். ஆனால் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும் போது பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதனை பதுக்கி வைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பற்றாக்குறை, அதனைதொடர்ந்து ஏற்படும் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் அரசாங்கத்தை பார்த்து நாங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா எனக் கேட்கின்றனர். அந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி இரவு, பகல் பாராமல் உழைக்கின்றான். ஆன் லைன் வியாபாரம் செய்து பதுக்கல்காரன் பதுக்கிக்கொண்டே இருக்கிறான். அரசாங்கம் விளைபொருட்கள் அதிகம் விளையும் நேரத்தில் அதனை சேமிப்பு குடோன்களில் சேமித்து வைத்து பின் விலை உயர்வு ஏற்படும்போது அதாவது சீசன் இல்லாத சமயத்தில் அதிக விலைக்கு விற்று அதில் ஏற்படும் கூடுதல் வருவாயை விவசாயிக்கு தரவேண்டும்.
மார்க்கெட் கமிட்டியில் பெரும் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்து கின்றனர். அரசாங்கத்துக்கும் இந்த நிலை தெரியும். ஆனால் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
இதனால்தான் விவசாயிகள் தங்கள் விலைநிலங்களை விற்றுவருகின்றனர். அவ்வாறு வாங்கும் விளை நிலங்களிலும் விவசாயம் நடைபெறுவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாம் அரிசிக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கவேண்டிய அபாய நிலை ஏற்படும். நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்க்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன்.
சிறு, மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரு 25 ஆயிரம் சம்மந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் அரசாங்கம் பணம்போடவேண்டும். காரணம் அந்த விவசாயி இந்த சூழ்நிலையிலும் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவே இந்த தொகை ஆகும்.
விவசாயிகள் பாவப்பட்டவர்களாக உள்ளனர். விவசாயிகளுக்காக நாம்போராடும் இந்த நிலையை அனைவரும் உணரவேண்டும். அந்த நிலை வரும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications