வெளியூர் காசோலைகளுக்கு சேவைக் கட்டணம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளியூர் காசோலைகளுக்கு வங்கிகளில் வசூலிக்கப்படும் சேவை வரியை பாதியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
இதன்படி ரூ 5000-க்குட்பட்ட காசோலைகளுக்கு சேவைக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 50 ரூபாயாக இருந்தது. புதிய உத்தரவுப்படி இனி ரூ 25 மட்டும் வசூலிக்கப்படும்.
ரூ 5001 முதல் ரூ 10000 வரையிலான காசோலைகளுக்கு ரூ 50-ம், ரூ 10001 முதல் ரூ 1 லட்சம் வரையிலான காசோலைகளுக்கு ரூ 100-ம் வசூலிக்கப்படும். ரூ 1 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள காசோலைகளுக்கு வங்கிகள் விருப்பப்படி சேவைக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
புதிய கட்டண விகிதங்கள் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications