கேரளாவில் ஒரே நேரத்தில் 8 கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
பத்தினம்திட்டா: கேரளாவில் ஒரே நேரத்தில் 8 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சபரிமலை புல்மேடு பகுதியில் கடந்த 14-ம் தேதி மகரஜோதியை பார்த்துவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 109 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார், வனத்துறை, தேவசம்போர்டு ஆகியோர் முரண்பாடான அறிக்கைகளை கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
தேவசம்போர்டு அறிக்கையில், புல்மேடு பகுதியில் அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அறிக்கையில் புல்மேட்டில் போதிய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மிகவும் திறமையாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த பிறகு புல்மேட்டுக்கு 729 போலீசார் அனுப்பப்பட்டனர் என கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விபத்து குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் அசோக் குமார் சிங் அரசுக்கு கொடுத்த அறிக்கையில் முரண்பாடான தகவல்கள் இருந்ததாக தெரிகிறது.
மேலும் அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதால் இடுக்கி கலெக்டர் அசோக் குமார் சிங் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மலப்புரம் கலெக்டர் எம்சி மோகன்தாஸ் இடுக்கி கலெக்டராக நியமிககப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 8 கலெக்டர்கள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ளனர். இடுக்கி கலெக்டரை மாற்றம் செய்வதற்காகவே அரசு இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications