தேர்தல் ஆணைய உத்தரவு: நெல்லை மாவட்டத்தில் 30 எஸ்ஐக்கள் மாற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 30 எஸ்ஐக்கள் இன்று அதிரடியாக மாற்றப்பட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 30 எஸ்ஐக்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி எஸ்ஐ தமிழ்செல்வி பாவூர்சத்திரத்துக்கும், தேவர்குளம் எஸ். ஐ முத்துலெட்சுமி சீவலபேரிக்கும், நெல்லை ரூரல் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ அன்னதாய் மூன்றடைப்புக்கும், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ சுசீலா தேவர்குளத்துக்கும், பத்தமடை எஸ். ஐ. ஷோபா ஜென்சி கூடன்குளத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. பத்திரகாளி பவுன் நான்குநேரிக்கும், கல்லிடைக்குறிச்சி எஸ்.ஐ. ரோஜா விகேபுதூருக்கும், சங்கரன்கோவில் டவுன் எஸ்.ஐ. ராஜேஸ்வரி ஆழ்வார்குறிச்சிக்கும் மாற்றப்பட்டனர்.
ஏர்வாடி எஸ்.ஐ. அந்தோணியம்மாள் மூலக்கரைபட்டிக்கும், ஆலங்குளம் எஸ். ஐ. மாலதி பிசிஆர் யூனீட்கும், ராதாபுரம் எஸ். ஐ. பார்வதி சேரன்மகாதேவிக்கும், கடையம் எஸ். ஐ. ஸ்ரீராள்பானு மூன்னிர்பள்ளத்திற்கும் மாற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications