பெங்களூரில் 48 மணி நேரத்த்துக்கு 144!

பாதுகாப்பு கருதி, பெங்களூர் நகரம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவு 144 பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடி நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் சேர்ந்து நின்றாலு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் நேற்று இரவு அனுமதி அளித்து உத்தரவு இட்டதைத் தொடரந்து மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக வரலாற்றில் இதுவரை இல்லாத பதட்ட நிலை இது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெங்களூரில் வன்முறை மோசமாகியுள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
30 பட்டாலியனைச் சேர்ந்த 18000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் சங்கர் பிதாரி தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர, நகர ஆயுதப் படைப் போலீசார், மாவட்ட ஆயுதப் படை ரிசர்வ் போலீஸ் மற்றும் விரைவு நடவடிக்கைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த சிறப்புப் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மங்களூர் ஸ்தம்பித்தது...
கர்நாடக மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மங்களூருவில் 100 சதவீதம் பந்த் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டது. கார், ஆட்டோ கூட ஓடவில்லை. மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதையும் நிறுத்திவிட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
தார்வாட் பகுதியில் மட்டும் 800 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, போக்குவரத்தை முற்றிலும் வாபஸ் வாங்கிக் கொண்டதாக, மாநில போக்குவரத்துக் கழக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications