மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் 10 பேர் சுட்டுக் கொலை
நியூவோ லாரிடோ (மெக்சிகோ): மெக்சிகோ மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லைப் பகுதியில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், மெக்சிகோ படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் போதைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மெக்சிகோவின் வட கிழக்கு மாகாணமான டமாலிபாஸில் உள்ள, அமெரிக்க எல்லையையொட்டியுள்ள இடத்தில் இந்த சண்டை நடந்தது. வாலி ஹெர்மோசா என்ற இடத்தில் ஆயுதம் தாங்கிய போதைப் பொருள் கும்பலைப் பார்த்த ராணுவத்தினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில், ராக்கெட் லாஞ்சர், 20 கையெறி குண்டுகள், 2 கிரனேட் லாஞ்சர்கள், 24 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தால் அமெரிக்க எல்லையில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications