ஜப்பானுடன் தமிழகம் தொழில் ஒப்பந்தம்-குவியப் போகும் ஜப்பானிய முதலீடுகள்
சென்னை: தமிழகத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே தொழில் விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான ஜப்பானிய நிறுவனங்கள் தொழில் முதலீடுகளைச் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பானிய பொருளாதார வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் நிதிக் கழக பிரிவின் இயக்குநர் ஹிதனோபு தெரமுரா மற்றும் தமிழக அரசின் தொழிற்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை வரவேற்று மு.க.ஸ்டாலின் கூறுகையில்,இந்தியாவில் தற்போது 725 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. அதில் 300 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவாகவும், நல்ல புரிந்து கொள்ளுதலுடனும் உள்ளன. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் மேம்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பொருளாதார சுதந்திரத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னணியில் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் விருப்ப மாநிலமாகவும் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது.
தமிழக மக்களுக்கு உலகத் தரமான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி்த தருவதில் தமிழக அரசு ஆர்வத்துடன் உள்ளது. இத்துறையில் பெருமளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் ஜப்பானிய முதலீடுகள் பெருகும். பெருமளவிலான நிறுவனங்கள் இங்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஜப்பானின் சர்வதேச துறை இணை அமைச்சர் ஹிடேசி ஒகடா கூறுகையில், சென்னை நகரம் இந்தியாவின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளதும், இங்கு தொழிளாளர் வளம் சிறப்பாக இருப்பதுமே எங்களை இந்த மாநிலத்திற்கு வரத் தூண்டியது. தமிழகத்திற்கு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.
எண்ணூர் துறைமுகத்திலிருந்து ஜப்பானின் நிஸ்ஸான் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் பெருமளவில் விரைவில் ஏற்றுமதியாகும் என்று நம்புகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications