தமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1983 ஆம் ஆண்டிலிருந்து 27 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானமீனவர்கள் சிறைப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
நம்முடைய கடல் எல்லைக்குள்ளாகவே சிங்களக் கடற்படை அத்துமீறி நுழைந்து மீனவர்களைத் தாக்கி வருகிறது. ஆனால் இந்த 27 ஆண்டுகாலத்தில் ஒருமுறைகூட இந்தியக் கடலோரக் காவல் படை சிங்களக் கடற்படையை எதிர்த்துச் சுட்டதில்லை. மீனவர்களைக் காப்பாற்றுவதற்கும் முன் வரவில்லை.
உலகத்தின் ஐந்தாவது பெரிய கடற்படை இந்தியக் கடற்படை எனப் பெருமைப் பேசப்படுகிறது.
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆப்பிரிக்காவில் இருக்கும் சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் கடற்கொள்ளைகாரர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்கு இந்தியக் கடற்படை விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் நமது கடல் பகுதியில் நமது மீனவர்கள் அண்டை நாடு கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க முன்வராமல் இந்தியக் கடற்படை வேடிக்கைப் பார்க்கிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதியில் புகுந்து விட்டாலோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத்தாண்டி வங்கதேசம், மியான்மர் கடற்பகுதியில் புகுந்துவிட்டாலோ அவர்களை அந்தந்த நாட்டு அரசுகள், கடற்படைகள் சுட்டுக் கொல்வதில்லை.
தமிழக மீனவர்களுக்கு ஆயுதப் பயிற்சிக் கொடுத்து அவர்களுக்கு துப்பாக்கிகளும் வழங்கப்பட்டால் ஒழிய இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேறுவழியில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications