வாக்காளர் அடையாளர் அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து தலித் கிறிஸ்தவர் ஆர்ப்பாட்டம்!
நெல்லை: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய தலித் கிறிஸ்தவர்கள் நல இயக்கம், தலித் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம், தலித் கிறி்ஸ்தவர் விடுதலை வாழ்வுரி்மை இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று பாளையங்கோட்டையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டக் குழுவினர் நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் தலித் கிறிஸ்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம் அடையாள அட்டைகளைக் கொடுத்தபோது அவர் அவற்றை பெற்றுக் கொண்டார். அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், "தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர்களில் சேர்க்க வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளோம். இதன் பிறகும் எங்களை பட்டியல் இனத்தில் சேர்க்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம்," என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications