சுற்றுலாத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழ் நாடு சுற்றுலாத் துறை செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 ஜி ஊழல் விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய ஒரு என்ஜிஓ-வின் பெயரை சென்னை சங்கமம் விளம்பரத்தில் பயன்படுத்தியதாலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினார். சென்னை சங்கம் கடந்த 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் என்ஜிஓ தமிழ் மையத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 7-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் அடங்கிய பெஞ்ச் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சேர்மனுக்கு நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications