தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை உறவை இந்தியாவுக்கு எதற்கு? - சீமான் ஆவேசம்
நெல்லை: தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கையுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் தெரிவித்தார்.
வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசியது:
"கடந்த 60 ஆண்டுகளாக ஈழ மண்ணிலுள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழர்களையும் சக மனிதர்களாகக் கருதாமல் சிங்கள ராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர். இந்திய அரசு கரம் நீட்டி தடுப்பதற்கு பதிலாக கரம் கொடுத்து உதவுகிறது. இதுவரை 538 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளைத் தடுத்து நிறுத்தத் துடித்தால் என்னை தேச துரோகி என்கின்றனர். இந்த நாட்டின் குடிமகனான மீனவன் கொல்லப்படுவதை கடற்படை தடுக்க வேண்டாமா? இங்கு வந்த மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி பேசும்போது கூட இலங்கை நட்பு நாடு என்கிறார்.
எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்னும் நாடு எப்படி நட்பு நாடு ஆகும்? பகை நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட இதுவரை ஒரு இந்திய மீனவர்களையும் கொல்லவில்லை. எனவே இலங்கையுடான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். கூட்டுப்படை பயிற்சியில் ஈடுபடக் கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது. திமுக எத்தனை இடங்கள் கொடுத்தாலும் அத்தனை இடங்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம்," என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications