டெல்லி பேரணியில் பங்கேற்குமாறு ஜெ.வுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு
சென்னை: டெல்லியில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடக்கும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று சென்னை வந்த பிரகாஷ் காரத், ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார். முக்கால் மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதை ஜெயலலிதாவிடம் தெரிவித்ததாகவும் கூறினார் காரத்.
மேலும் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வை கண்டித்து, 9 எதிர்கட்சிகள் சேர்ந்து டெல்லியில் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி பேரணி நடத்துகின்றன. இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க வந்தேன் என்றார் காரத்.
3 பேர் கொண்ட குழு அமைப்பு:
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், காரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் அதிமுக கூட்டணி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு உலகமய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வருகிறது. திமுக தமிழ்நாட்டில் இதே கொள்கைகளை பின்பற்றுவதால் அனைத்து மக்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், உரம், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பது, சில்லரை வர்த்தகத்தில் நேரடி வெளிநாட்டு மூலதனத்துக்கு அனுமதி, முன்பேர வர்த்தகத்தை அனுமதிப்பது போன்ற பொருளாதார நடவடிக்கைகள் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளை கொழுக்க வைக்கவும் - இந்திய ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கியும் வருகிறது.
அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து சாதாரண மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கட்டுபாடற்ற விலை உயர்வுகளால் நாடு முழுவதும் பட்டினிச்சாவுகளும் - தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
நாட்டை உலுக்கியுள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. மத்திய ஆட்சியிலும், மாநில அரசிலும் உயர்மட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் இந்த ஊழல்களில் சம்மந்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டினால் விவசாயம், ஜவுளித்தொழில், சிறு தொழில்கள் என அனைத்து தொழில்களும் நலிவுற்றுள்ளன. திமுக அரசின் தொழில் கொள்கை பன்னாட்டு, உள்நாட்டு பெரும் தொழில் குழுமங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன.
பன்னாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்தாகும் தொழில் ஒப்பந்தங்கள் வெளிப்படை தன்மையுடன் இல்லை. தடையற்ற மின்சாரம் உள்பட பல சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது. மறுபுறத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகினறன. தொழிலாளர்களுடைய போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றது. 62 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்து வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், வீட்டுமனைப்பட்டா வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும் விவசாய நிலங்கள் அளவின்றி வழங்கப்படுகின்றன. இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது வனஉரிமைச் சட்டம் அமலாக்கப்படாதது போன்றவைகளால் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்கின்றனர்.
தலித்துகள் மீதான தீண்டாமைக் கொடுமைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்து கொண்டுள்ளது. சமூக விரோத செயல்களை காவல்துறை கட்டுப்படுத்தாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும் காவல் நிலைய அத்துமீறல்கள், போராடும் மக்கள் மீது தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் பறிப்பு தொடர் கதையாகியுள்ளன. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மணற் கொள்ளை, நில மோசடிகள், நில ஆக்கிரமிப்புகள், அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில் எல்லா துறைகளிலும் திமுக அரசு தோல்வியை கண்டுள்ளது.
மறுபக்கம் பாஜகவின் மதவெறி செயல்பாடுகள் தமிழகத்திலும் அதிகரித்து வருகின்றன. கர்நாடகத்தில் பாஜக முதல்வர் நில ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கியுள்ளதும், சங்பரிவார் அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள பல சம்பவங்களும் அம்பலமாகியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து - திமுக ஆட்சியை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்க முடியும் என கட்சி நம்புகிறது. இக்கடமையினை நிறைவேற்றிட அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கொண்டு சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என மாநிலக்குழு தீர்மானிக்கிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்திட மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டுமென வற்புறுத்துவதோடு இக்கட்சிகளுக்கு பேராதரவினை தர வேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் வேண்டுகிறது.
சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினை அமைத்துள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications