தேசியக் கொடியை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை-கத்காரி
டெல்லி: ஜம்முவில் பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமாஐனது. தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் செயல் அரசியல் என்று காங்கிரஸ் வர்ணித்திருப்பது தவறானது, மடத்தனமானது என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
இன்று டெல்லி பாஜக தலைமையகத்தில் குடியரசு தின கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை கட்சித் தலைவர் கத்காரி ஏற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பாஜக தலைவர்கள் ஜம்முவில் வைத்து கைது செய்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
தேசியக் கொடி ஏற்றுவதை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது தவறானது, மடத்தனமானது. இதில் அரசியல் எங்கே வருகிறது. தேசியக் கொடியை ஏற்றுவது அரசியலா. இது அரசியல் அல்ல, எங்களது கடமை.
பிரிவினைவாதிகளின் நெருக்குதலுக்கு மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் பணிந்து விட்டனர் என்றார் கத்காரி.
சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி விடுதலை
இதற்கிடையே நேற்று கைது செய்யப்பட்ட சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, அனந்தக்குமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கத்துவா என்ற இடத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஜம்முவில் உள்ள பாஜக தலைமையகத்திற்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருமாறு பாஜகவுக்கு முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதை பாஜக நிராகரித்து விட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications