சேலத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம்... ஜெ அறிக்கை!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜவுளித் தொழில் நலிவடையக்காரணமான தி.மு.க. அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்திட வலியுறுத்தியும், தங்குதடையின்றி பட்டு கோறா நூல் கிடைத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (30-ந் தேதி) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டிடம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
அமைப்புச்செயலாளர் செம்மலை எம்.பி. தலைமையில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் மற்றும் கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் எல்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும். தோழமைக்கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
-இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications