மு.க.அழகிரி மணி விழா-ஸ்டாலின் மதுரை சென்று வாழ்த்து
மதுரை: இன்று மணி விழா கொண்டாடும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, நேற்றே அவரது வீடு சென்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
மு.க.அழகிரிக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். இதையொட்டி தனது நட்சத்திர பிறந்த நாளான கடந்த வியாழக்கிழமையன்றே முதல்வர் கருணாநிதியிடம், அழகிரி தனது மனைவியுடன் சென்று வாழ்த்து பெற்றார். முதல்வர் வீட்டிலேயே மணி விழாவும் எளிமையாக நடந்தது.
இந்த நிலையில் நேற்று மதுரை சென்றார் துணை முதல்வரும் அழகிரியின் தம்பியுமான மு.க.ஸ்டாலின். அவருடன் சகோதரி செல்வியும் வந்திருந்தார். இருவரும் சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர்களை அழகிரி, அவருடைய மனைவி காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அழகிரி, ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தார். சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஸ்டாலினும், செல்வியும் அழகிரி வீட்டில் மதிய உணவு அருந்தினர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
தனது மதுரை பயணம் குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், அண்ணனின் மணி விழாவையொட்டி முன்கூட்டியே வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார்.
இன்று தனது பிறந்த நாளன்று தான் மதுரையில் இருக்க மாட்டேன் என்று அழகிரி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் அவரது தொண்டர்களும், திமுகவினரும் மதுரை நகரில் ஏராளமான நல உதவிகளை வழங்கியும், கோவில்களில் அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் பிறந்த நாளை வழக்கம் போல கொண்டாடினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications