நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் ஒரே நேரத்தில் மாற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தாலுகா தாசில்தார்கள் ஓராண்டுக்கும் மேலாக பணியில் நீடித்து வந்தனர். வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடந்து வந்ததால் தாசில்தார்களை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில் வரைவு வக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். பாளையங்கோட்டை தாசில்தார் சங்கர சுப்பிரமணியன் நதி நீர் இணைப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் தங்கவேலு பாளையங்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை தாசில்தார் சுப்பையா மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், சங்கரன்கோவில் ஆதி திராவிட நல தாசில்தார் அபுல் காசிம் நெல்லை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணியன் ராதாபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதாபுரம் தாசில்தாராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சங்கரன்கோவில் ஆதி திராவிட நல தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஜெயராமன் பிறப்பித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications