உபியில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி : 3 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் நக்லா பக்ரக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நதகர் மாவட்டத்தில் உள்ளது நக்லா பக்ரக் கிராமம். அங்குள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு திடீர் என்று தீப்பிடித்தது. இதில் அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மெஹபூப் குரேஷி, அவரது மனைவி ஆம்னா மற்றும் 3 குழந்தைகள் தான் இறந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications