சென்னையில் 26-வது இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி!

இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழகம் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி குழு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 26-வது இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், மத்திய குறு- சிறு- நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் வீரபத்ர சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் 70 சதவீதம் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களாக உள்ளன. மொத்த தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த ஏற்றுமதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 40 சதவீதம் ஆகும். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதால் இந்தத் தொழிலை மத்திய அரசு அங்கீகரித்து, அதன் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது'' என்று தெரிவித்தார்.
உலகளவில் முன்னிலை:
மத்திய நீர் ஆதாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பேசுகையில், "தோல் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரை, போதிய அளவுக்கு தோல், அதை பொருட்களாக தயாரிப்பதற்கு தேவையான வசதிகள் நம்மிடமே உள்ளன. நம்மிடம் உள்ள வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தினால் தோல் பொருட்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னிலை வகிக்க முடியும்'' என்றார்.
400 அரங்குகளுடன் அமைந்துள்ள இந்த கண்காட்சியில், உலகத் தரம் வாய்ந்த பினிஷ்டு லெதர், செருப்பு தயாரிப்பிற்கான பொருட்கள், செருப்புகள், தோல் ஆடைகள், பெல்ட்டுகள், உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
வரும் 3-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications