பிப். 3 முதல் +2 செய்முறைத்தேர்வு: நாலரை லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு வரும் 3-ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்வுகளை சுமார் 4.5. லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்கி 25-ம் தேதி நிறைவடைகிறது. இதை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான செயல்முறை தேர்வு மாநிலம் முழுவதும் வரும் 3-ம் தேதி துவங்குகிறது.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் செயல்முறை தேர்வு துவங்கினாலும் முடியும் நாட்கள் மாவட்டம் வாரியாக வேறுபடும். இந்த ஆண்டுக்கான தேர்வுகளை வரும் 3-ம் தேதி துவங்கி 22-ம் தேதிக்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தேர்வுகளி்ல் மொத்தம் நாலரை லட்சம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 9-ம் தேதி வரை, 10- தேதி முதல் 15-ம் தேதி வரை என 2 கட்டங்களாக செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
-
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications