தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் சொத்து கணக்கை வெளியிட முடிவு: அத்வானி
டெல்லி: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க வலியுறுத்தி, பாஜக கட்சி கூட்டணியில் உள்ள முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள் என அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிடுவார்கள் என்று அத்வானி தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அத்வானி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தீர்க்கமாக உள்ளது. இதற்கென சிறப்பு பிரிவையும் கட்சி சார்பில் அமைக்கவிருக்கிறோம்.
பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். நமது கூட்டணியில் உள்ளவர்கள் யாரிடமும் கறுப்பு பணம் இல்லை என்பதை அரசுக்கு நிரூபிக்கத் தான் இந்த முடிவு.
அரசியல்வாதிகளில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஊழல்வாதிகள் என்ற மோசமான எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.
கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தொடரப்படும் சட்டப்பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications