திமுகவிடம் 78 சீட் கேட்க காங்கிரஸ் முடிவு-குலாம் நபி ஆசாத்துடன் சோனியா ஆலோசனை

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிகைகளில் சோனியா இறங்கியுள்ளார். நேற்று குலாம் நபி ஆசாத்தை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார் சோனியா காந்தி. இந்த சந்திப்பின்போது திமுகவிடம் கேட்கப்பட வேண்டிய சீட்கள் விவரம், பேச்சுவார்த்தைக்கான குழு அமைப்பது, அதில்யார் யாரை இடம் பெறச் செய்வது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில்,தேர்தல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கி விடும் என்று தெரிகிறது. நமக்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்துப் பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டிய நிலை. திமுக தனது குழுவை அமைத்த பின்னர் நாங்களும் எங்களது குழுவை அறிவித்து உடனடியாக பேச்சுக்களைத் தொடங்கி விடுவோம் என்றார்.
கடந்த முறை தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட குழுவில் மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கிரஸின் இரு பெரும் கோஷ்டித் தலைவர்களுமான ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முறை மேலும் சில கோஷ்டித் தலைவர்களுக்கு குழுவில் இடம் கொடுக்கப்படவுள்ளதாம்.
78 சீட் கேட்கத் திட்டம்:
இதற்கிடையே திமுகவிடம் 78 சீட்களைக் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதை ஆசாத்தே தெரிவித்துள்ளார். இதில் குறைப்பு என்ற பேச்சுக்கே அனேகமாக இடமிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சி 83 தொகுதிகளைக் கேட்கத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்த சீட்களைத் தர திமுக முன்வந்தால் ஆட்சியில் பங்கு கேட்கும் கோரிக்கையைக் கைவிட காங்கிரஸ் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications