மகள்களுடன் மீண்டும் இந்தியா வர மிஷல் ஆர்வம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம். ஆனால் இந்த முறை தனது மகள்கள் சாஷா மற்றும் மால்யாவையும் தன்னுடன் அழைத்து வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் மிஷலுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் ஆகியோருடன் நடந்த சந்திப்பின்போது ஒபாமா இந்த தகவலைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மிஷல் இந்திய பயணத்தை பெரிதும் விரும்பியதாகவும், மீண்டும் ஒரு முறை வர விரும்புவதாகவும், இந்த முறை 2 மகள்களுடன் வர வேண்டும் என்று விரும்புவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மிஷல் வந்தபோது அவர்கள் 2 மகள்களும் உடன் வருவதாகத் தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்காததால் பயணம் ரத்தானது. மிஷல் விரைவில் இந்தியா வருவார் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தானும், மிஷலும் இந்திய பயணத்தை பெரிதும் விரும்பியதாகவும், இந்த வாய்ப்புக்காக தாங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறியதாக அவரிடம் தெரிவிக்குமாறும் மேனனைக் கேட்டுக் கொண்டார் ஒபாமா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications