ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கும் தொடர்புண்டு-சாமி வாதம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்புள்ளது. எனவே எனது தனி வழக்கை டெல்லி கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனியாக சாமியும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை அரசுத் தரப்பில் வக்கீலாக கருதி சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்த மனுவை விசாரித்து வரும் நீதிமன்றம் இன்று சாமியிடம் சில கேள்விகளைக் கேட்டது. இதுகுறித்து நீதிபதி பிரதீப் சத்தா கேட்கையில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராசாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கின் அவசியம் என்ன என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சாமி, இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். எனது மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டார்.
வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications