26 கருப்புப் பண முதலைகளின் பெயரை ஏற்கனவே பிரதமரிடம் கொடுத்துள்ளேன்-அத்வானி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 2008ம் ஆண்டு நான் பிரதமரை சந்தித்தபோது, அவரிடம், ஜெர்மனி வங்கியில் பணத்தைக் குவித்து வைத்துள்ள 26 இந்தியர்கள் குறித்த முழு விவரத்தையும் கொடுத்தேன்.
முழு விவரத்தை நான் கொடுத்தும் கூட இதுதொடர்பாக பிரதமர் மிகச் சிறிய அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளார் என்று கூறினார் அத்வானி.
அத்வானியின் இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்புப் பண விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு பூடகமாகவே செயல்பட்டு வரும் நிலையில் 27 கருப்புப் பண முதலைகளை பிரதமரிடத்தில் அம்பலப்படுத்தியதாக அத்வானி கூறியிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் யார் அந்த 26 பேர் என்பதை அத்வானி தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications