சாலை திட்டங்களை பிப் 20க்குள் முடிக்க அரசு உத்தரவு
நெல்லை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் ரூ.1000 கோடி சிறப்பு சாலைகள் திட்டத்தின் அன்றாட முன்னேற்றத்தை இணையதளத்தின் மூலம் பதிவேற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டங்களை பிப்ரவரி 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, மற்றும் டவுண் பஞ்சாயத்து சாலைகளில் மண் சாலைகளே இல்லாத அளவுக்கு அனைத்து சாலைகளையும் தார் மற்றும் சிமிண்ட் சாலைகளாக மாற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது.
சாலைகள் உலக தரத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வர் தன்செட்டி பல நிபந்தனைகளுடன் டெண்டர் விடுவதற்கான ஏற்பாடு செய்தார். இதன் மூலம் அனைத்து அனுபவமுள்ள இயந்திரம் கொண்ட கான்ட்ராக்டர்களை மட்டுமே டெண்டர் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கின. மாநகராட்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டிலும், நகராட்சியில் ரூ.25 கோடி மதிப்பீட்டிலும் டவுன் பஞ்சாயத்துகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டிலும் பணிக்களுக்கான ஆவணங்கள் பிறப்பிக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் துவங்கியுள்ளன. இதனால் ஓளிவு மறைவின்றி வெளிப்படையாக அனைத்து பணிகளும் தரமாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி சாலை திட்ட பணிகளை ஜன 20ம் தேதியே முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஜல்லி உள்ளிட்ட பல பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தி்ல் கிடைக்காததால் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதனால் பிப் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications