'அதிமுக ..அதிமுக...அதிமுக...'-சரத்குமாருக்கு பதில் தந்த தொண்டர்கள்
தென்காசி: வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை திருச்சி மாநாட்டில் அறிவிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தென்காசியில் நேற்றிரவு சமகவின் பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சமக தலைவர் சரத்குமார் பேசியதாவது,
விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். சுதந்திரம் பெற்ற பிறகும் 35.7 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ்தான் உள்ளனர். முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவசம் உண்டு என்கிறார். கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை காமராஜர் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்தான் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது, நடப்பது ஆட்சியா, ஊழலா? இதுவரை ஆற்று மணலை திருடி சம்பாதித்தவர்கள் தற்போது காற்றலைகள் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆற்று மணலை அதிகமாக திருடினால் நீர்வளம் பாதிக்கும் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் மணலை கொள்ளையடித்து விட்டனர்.
மேலும், ஸ்பெக்ட்ரம் மூலம் இந்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு செய்துவிட்டனர். திமுக பொதுக்குழுவில் ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கையில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். இது மிகவும் புதுமையாக இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாமல் கெஞ்சிப்பார்க்கும் நிலையில்தான் பாமக இருக்கிறது. தைரியமிருந்தால் தனித்து போட்டியிட்டு பாருங்கள். வரும் சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் நடைபெற உள்ள திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும். அன்றைய தினமே வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக கூட்டத்தில் சரத்குமார், தமிழ்நாட்டில் நடப்பது ஊழல் ஆட்சி. இந்த ஆட்சி அகற்றப்படும் என்று பேசிவிட்டு, ''தப்பு செய்தவன் திருந்தியாகனும். தவறு செய்தவன் வருந்தியாகனும்'' என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடினார்.
பின்னர் தொண்டர்களை பார்த்து, ''எந்தக் கட்சியுடன் நாம் கூட்டணி அமைக்க வேண்டும்? என்று சேலம் தேமுதிக மாநாட்டில் விஜய்காந்த் கேட்டது போல, மூன்று முறை கேள்வி எழுப்பினார்.
மூன்று முறையும் தொண்டர்கள் , அதிமுக ..அதிமுக...அதிமுக...என்று குரல் கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications