மும்பை தாக்குதல் வழக்கில் 21ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

26/11 தாக்குதல்கள் வழக்கின் முக்கிய குற்றவாளியான கசாபிற்கு வரும் 21ம் தேதி தீர்பளிக்கவிருப்பதாக 2 நீதிபதிகள் அடங்கிய மும்பை உயர்நீதிமன்ற பெஞ்ச் இன்று தெரிவித்தது.
வரும் 21ம் தேதி மரண தண்டனையை உறுதி செய்வது குறித்த தீர்ப்புடன், கசாப் தாக்கல் செய்துள்ள மனு, மாராஷி்டிரா அரசு பாஹிம் அன்சாரி மற்றும் சபாவுத்தீன் அகமது ஆகியோரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கப்படும்.
இந்த வழக்கில் வாதங்கள் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதியே துவங்கிவிட்டது. தீபாவளி, கிறிஸ்துமஸ் விடுமுறைகள் தவிர்த்து தினமும் வழக்கு நடந்தது. முதன்முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் முறையீடு விசாரிக்கப்பட்டது. கசாப் சிறையில் இருந்தே வழக்கு விசாரணையில் கலந்துகொள்ளும் வகையில் நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 49ல் காமிரா பொருத்தப்பட்டிருந்தது.
கசாபிற்கு மரண தண்டனை விதிப்பது சரிதான் என்று நியாயப்படுத்தும் வகையில் வழக்கறிஞர் உஜ்வால் நிகம் கசாப் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் சி.டிக்களை சமர்பித்தார்.












Click it and Unblock the Notifications