Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த மத்திய அரசு தயார்?

Subscribe to Oneindia Tamil

P Chidambaram and Sushma Swaraj
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜேபிசி) அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளும் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக எதிர்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கைய ஏற்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இதை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது. இதேபோல் வரும் 21ம் தேதி தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவும், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பலமுறை பேச்சு நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இந் நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார்.

இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பவன்குமார் பன்சால், நாராயணசாமி, பரூக் அப்துல்லா, மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் குருதாஸ் தாஸ்குப்தா, டி.ராஜா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, டாக்டர் மைத்ரேயன், ராஷ்டிரீய லோக் தளம் தலைவர் அஜீத் சிங் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த வேண்டுமானால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தாங்கள் உறுதியாக இருப்பதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்தன.

குறிப்பாக பாஜக, அதிமுக இக் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தின.

இதையடுத்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எந்த விலையையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எக்காரணம் கொண்டும் குளிர்கால கூட்டத் தொடர் போல் நடந்து விடக்கூடாது என்பதில் அரசு மிகவும் தெளிவாக உள்ளது.

மேலும் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால் அது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரம் பற்றி மட்டும் விசாரணை நடத்துமா? அல்லது ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் ஆகியவை குறித்தும் விசாரிக்குமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசும் சபாநாயகரும் இணைந்துதான் இறுதி முடிவை மேற்கொள்வார்கள் என்றார்.

இதன்மூலம் எல்லா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விவாதிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க மத்திய அரசு தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

அதுபற்றி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியவுடன் அவையில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

திமுக மட்டும் எதிர்ப்பு:

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட்டுக் குழு விசாரணையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த நிலையில், திமுக மட்டும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது என்று கருத்து தெரிவித்தது.

பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு இது குறித்து விசாரித்து வருவதால், அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பின் இந்தப் பிரச்னை குறித்து மீண்டும் கூடி முடிவு செய்யலாம் என்று டி.ஆர். பாலு கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+