ஜெயலலிதாவை அவதூராக பேசிய வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு அபராதம் : ரூ. 2,400 கட்டினார்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அபராதம் கட்டினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நாஞ்சில் சம்பத் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் அன்று ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடிவாரண்ட் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜரானார். அப்போது மூன்று இடங்களில் உள்ள வழக்கிற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் ஆஜராகாததால், வழக்கிற்கு தலா 800 ரூபாய் வீதம் 2,400 ரூபாயை இலவச சட்ட உதவி முகாமிற்கு கட்ட வேண்டும் என மாவட்ட நீதிபதி பஷீர் அகமது உத்தரவிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதி குறிப்பிட்ட தொகையை கட்டியதால் அவர் மீது உள்ள பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications