கேரளாவில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 200 சன்மானம்:கொடியேறி பாலகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் வழங்கப்படும் என கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியதாவது,
சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருடத்திற்கு சராசரியாக 4 ஆயிரம் பேர் விபத்துகளில் பலியாகின்றனர். 40 ஆயிரம் பேர் காயம் அடைகின்றனர். விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் விதி முறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை விதிகளை மீறும் ஏராளமானோர் சிக்குகின்றனர். எனவே மேலும் 15 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததால்தான் பெருமளவு உயிர் சேதம் ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் வழக்குப் பதிவு செய்யும் என்ற அச்சமே இதற்கு காரணம். ஆனால் இனிமேல் யாரும் அப்படி பயப்பட தேவையில்லை. சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக தங்கள் காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு இனிமேல் ரூ.200 சன்மானம் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு எஸ்பி அலுவலகங்கத்திற்கும் ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications