தமிழக சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி இன்று சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதையடுதது தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஓட்டுப் பதிவுக்கு தேவையான ஏந்திரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. வாக்காளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதை வழங்க மாநிலம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இதற்கிடையே கடந்த மாதம் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி சென்னை வந்து அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும், யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஒப்புகைச் சீட்டு தரப்பட வேண்டும் என்று அவரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஒப்புகைச் சீட்டு தருவது குறித்து ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.இந் நிலையில் குரேஷி இன்றிரவு மீண்டும் சென்னை வருகிறார்.
நாளை சென்னை கிண்டியில் இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் அவர் பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
ஒப்புகை சீட்டு வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினரையும் சந்தித்துப் பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications