காமலீலைகள்-இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

Berlusconi
ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது தொடர்ந்து செக்ஸ் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குஜால் பேர்வழியான இவர் ஏராளமான பெண்களுடன் இவர் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பல பெண்களுக்கு பிரமாண்டமான மாளிகைகளையும் வாங்கித் தந்துள்ளார். இந் நிலையில் சமீபத்தில் 17 வயது மைனர் பெண்ணுடன் இவர் செக்ஸ் வைத்துக் கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந் நிலையில் பெர்லுஸ்கோனியின் செக்ஸ் லீலைகளுக்கு எதிராக இத்தாலியில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் ரோம், வெனிஸ், டிரையன்ட் பலர்மோ உள்ளிட்ட 200 இடங்களில் பேரணிகள் நடத்தினர்.

“பெண்மைக்கு மதிப்பு கொடு, “செக்ஸ் லீலையை நிறுத்து" என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டம் நடத்தினர்.

நேபிள்ஸ் நகரில் நடந்த பேரணியில் அந் நகர மேயர் ருசோ இயர் வோலினோவும் பங்கேற்றார். அவர் கூறுகையில், பெர்லுஸ்கோனியின் காமகளியாட்டம் இத்தாலியின் மரியாதையை குறிப்பாக பெண்களின் மதிப்பைக் குறைத்துள்ளது என்றார்.

பெர்லுஸ்கோனிக்கு எதிராக டோக்கியோ, லண்டன், போஸ்டன், ஏதென்ஸ் நகர்களிலும் இத்தாலியர்களும் அந்தந்த நாட்டுப் பெண்களும் போராட்டம் நடத்தினர். அங்குள்ள இத்தாலி தூதரகங்களை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+