ஆட்சியில் பங்கு-தேர்தலுக்கு முன்பே திமுகவிடம் உத்தரவாதம் பெற காங். நிர்வாகிகள் கோரிக்கை

ஆட்சியில் பங்கு என்பதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி திட்டவட்டமாக உள்ளார். இதை தேர்தலுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என திமுக கூறியதை அவர் ஏற்கவில்லை.
இந் நிலையில் தேர்தலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் உள்ள மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் ஜெயக்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று நதங்களது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர்.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கட்சியில் புதிதாக சேர்ந்த எஸ்.வி.சேகரும் பங்கேற்றார்.
அப்போது பெரும்பாலான காங்கிரசார் திமுகவிடம் 70 முதல் 80 தொகுதிகளைப் பெற வேண்டும், ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்ற ராகுல் காந்தியின் திட்டத்தையே முன் வைத்தனர். இது தொடர்பாக திமுகவிடம் தேர்தலுக்கு முன்பே உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் கோரினர்.
மேலும் இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள எங்களுக்கு வரும் தேர்தலிலும் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.
அத்தோடு அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் திமுக கூட்டணிக்கு கடும் சிக்கல் உருவாகும் என்பதால் பாமகவையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு:
இந் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சேர்க்காததை கண்டித்து அவரது ஆதரவு எம்எல்ஏவான பழனிச்சாமி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இன்னொரு ஆதரவாளரான ராணி வெங்கடேசன் கூட்டத்தை புறக்கணித்தார்.
கருணாநிதியுடன் ஐவர் குழு சந்திப்பு:
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் ஐவர் குழு முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது. அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் உடனிருந்தார்.
அப்போது தேர்தலில் திமுக கூட்டணி வென்றால், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற தங்கள் கட்சியினரின் கோரிக்கை குறித்து கருணாநிதியிடம் ஐவர் குழுவினர் எடுத்துரைத்தனர்.
2வது நாளாக ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு:
இந் நிலையில் இளங்கோவனை குழுவில் சேர்க்க வலியுறத்தி 8 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நடந்த ஐவர் குழு கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications