தேமுதிக கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?-டெல்லியில் பரபரப்பு

இதனால் தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவிடம் 90 இடங்கள், ஆட்சியில் பங்கு என்று நிபந்தனை போட்டுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று திமுக கூறியுள்ளது.கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரசுக்கு 50 இடங்கள், அவர்கள் வராவிட்டால் 65 இடங்கள் வரை தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் திமுகவை நெருக்கவோ என்னவோ டெல்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் பரப்பிவிட்டுள்ளது. அதாவது, விஜய்காந்துடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது என்பது தான் இந்தத் தகவல்.
காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவைச் சேர்ந்த ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், விஜய்காந்த் அனுப்பி வைத்த தூதர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் செய்தி பரவியது.
விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான கட்சியின் முக்கிய பிரமுகர் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் ராகுல் காந்தியின் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகவும், விமான நிலையத்திற்கே வந்து ராகுலுக்கு நெருக்கமான சிலர் அவரை அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அதே போல திமுகவை வலுவிழக்கச் செய்யவே கூட்டணியில் பாமகவை சேர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் காங்கிரஸ் கூறியதாகவும், அதே நேரத்தில் பாமகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தனியாக பேச்சு நடத்தி வருவதாகவும் செய்தி பரப்பப்பட்டுள்ளது.
அதாவது திமுகவை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டுவிட்டு தேமுதிக-பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக தரப்பில் கூறுகையில், இதை யார் பரப்பியது என்பதும் ஏன் பரப்பினார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களிடம் அதிக இடங்களை வாங்குவதற்காகவும் ஆட்சியில் பங்கு தரப்படும் என்ற உறுதிமொழியை எங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெறவும் காங்கிரஸ் மேற்கொள்ளும் மீடியா தந்திரம் இது. இதையெல்லாம் எங்கள் தலைவர் சமாளிப்பார் என்றனர்.
காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு:
இந் நிலையில் தேமுதிகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல்கள் அடிப்படையே இல்லாதவை என்றும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி இன்று டெல்லியில் நி்ருபர்களிடம் தெரிவித்தார்.
அழகிரியுடன் விஜய்காந்த் தரப்பு பேச்சு?:
இதற்கிடையே மதுரையில் வசிக்கும் விஜய்காந்தின் சகோதரியும் அவரது கணவரும் (இருவரும் பிரபல டாக்டர்கள்) திமுக தென் மண்டலப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரியை விஜய்காந்த் சார்பில் சில நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications