விஸ்வரூபமெடுக்கும் தாமிரபரணி பிரச்சினை: தூத்துக்குடியில் 23-ம் தேதி கடையடைப்பு!
தூத்துக்குடி: தாமிரபரணி குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் கால்வாய் தடுப்புச் சுவர் உயரத்தை குறைக்கக் கோரியும், ஆற்றின் போக்கை திசை திருப்பி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி கடையடைப்பு நடத்துகிறார்கள் விவசாயிகள்.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் அணைக்கட்டின் பழைய மட்டத்தின் மேல் ஒரு மீட்டர் உயர்த்தியும், 515 நீளத்திற்கு ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டி, ஆற்று தண்ணீர் வரத்தினை குறைத்து அதன் போக்கினை திசைமாற்றியும் விட்டது தமிழக அரசு. இதனை நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டம் என்று வேறு அரசு சொல்லிக் கொண்டது.
ஆனால் இந்த திட்டம் விவசாயிகளின் வயிற்றிலடிப்பது போலாகிவிட்டதாக பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தடுப்புச் சுவரில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதியை இடித்துவிட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விவசாயிகளிடம் புதியதாக கட்டிய தடுப்புசுவரை அகற்றி விடுவது என்று முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டனர். ஆனால் நிறைவேற்றவில்லை.
இதனை உடனடியாக நிறைவேற்றக் கோரி தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி வடிநில திட்டக்குழு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 23ம் தேதி இதற்காக மாவட்டம் தழுவிய கடையடைப்பு நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு தாமிரபரணி வடிநில திட்டக்குழு விவசாய சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு அமைப்பாக ஆதரவு திரட்டி வருகின்றனர். நேற்று இவர்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், லாரி உரிமையாளர் சங்கத்திற்கு சென்று ஆதரவு கேட்டனர்.
இதற்கான கூட்டம் காய்கறி மார்க்கெட் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தாமிரபரணி வடிநில திட்டக்குழு சேர்மன் உதயசூரியன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல், தாமிரபரணி முன்னாள் தலைவர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு மார்கெட் சங்கம் சார்பில் கடையடைப்பு செய்து ஆதரவு தருவது என்றும், லாரி உரிமையாளர்கள் லாரியை நிறுத்தி ஆதரவு தெரிவிக்கவும் உறுதியளித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications