கூட்டணி தர்மம் குறித்த பிரதமரின் கருத்தால் காங்கிரசுடன் உறவு பாதிக்காது-திமுக

ஆனால், இது குறித்து மீடியாக்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தவுடன் இந்த விஷயத்தில் வெளிப்படையாக செயல்படுமாறு அவருக்கு நான் அறிவுறுத்தி கடிதம் கூட எழுதினேன். மற்றபடி ஒதுக்கீட்டில் நடந்த விவகாரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நிருபர்களிடம் கூறினார். இதன்மூலம் எல்லா தவறுகளுக்கும் ராசா தான் காரணம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
மேலும் நான் தவறே செய்யாதவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடந்த சில சம்பவங்களுக்காக நான் மிகப்பெரிய குற்றவாளி ஆக்கப்பட்டு இருக்கிறேன்.
ஊழல் செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். யார் ஊழல் செய்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி தர்மத்தின்படிதான் ராசாவை இரண்டாவது முறையாகவும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நியமித்தேன், அவரை நியமிக்கச் சொன்னது திமுக தான். கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், திமுகவை மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டா வெறுப்பாகத்தான் வைத்துள்ளது என்றரீதியில் பேச்சு எழுந்துள்ளது.
இதனால் இனிமேலும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரக் கூடாது என்று எதிர்க் கட்சிகள் கூறியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரான டி.ராசா கூறுகையில், இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கூட்டணி கூட்டணி அரசியல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து குறித்து திமுக எம்பியும் செய்தித் தொடர்பாளரும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில்,
திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறவு பற்றி பிரதமர் மன்மோகன் சிங் எதையும் தவறாகச் சொல்லவில்லை. அவர் அதுபற்றி தவறாக எதையும் கூறியதாக நான் கருதவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி உறவை அவர் குறை கூறவில்லை.
தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைகளைத்தான் பின்பற்றியதாகவும், தனக்கு முன்பாக பொறுப்பில் இருந்தவர்களின் நடைமுறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும் ஏற்கனவே ராசா தெளிவாகக் கூறியுள்ளார் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications