தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா

நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவதில் திமுக உரிய மரியாதையைத் தர வேண்டும். தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் விளங்கும்.
மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க எல்லைக்கோடு அமைக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செயல்படாது. ராஜபக்சே மனித இனத்திற்கு எதிரானவர். ஹிட்லரை போல சர்வாதிகார ஆட்சி நடத்தி தமிழர்களை கொன்று குவித்துள்ளார்.
தமிழகத்தில் பா.கவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என சோனியா காந்தி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானவை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் திமுக அரசு செய்த தவறுகளை இளைஞர் காங்கிரஸ் சுட்டி காட்டியதே தவிர, திமுக மீது எந்தவித வெறுப்பும் இல்லை. இதை துணை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார்.
காங்கிரசுக்கு 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதால் கூடுதல் இடங்களை கேட்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தல் கூட்டணியை பாதிக்காது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை அறிய ராகுல்காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்றார்.
ராகுலின் சர்பிரைஸ் கோழிக்கோடு விசிட்:
இந் நிலையில் நேற்று மாலை ரகசியமாக கோழிக்கோடு வந்தார். அங்கிருந்து அவர் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியாமல் கேரள போலீசார் திணறி வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் ஒரு விவிஐபி வருவதாக கோழிக்கோடு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. விமானம் வந்த பிறகுதான் அது ராகுல்காந்தி என அவர்களுக்கு தெரிய வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய ராகுல் உடனே அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து 2 காரில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சென்றனர்.
அதற்குபிறகுதான் கோழிக்கோடு போலீசாருக்கு ராகுல் வந்த தகவல் தெரிந்தது. அங்குள்ள ராமநாட்டுகரை ஓய்வு விடுதியில் அவர் இரவு தங்குவார் என கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடக்கி விட்டனர். ஆனால் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் பின்னர் காரில் மைசூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வெகுநேரம் வரை ராகுல் எங்கிருக்கிறார் என்ற தகவல் கோழிக்கோடு போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications