தூத்துக்குடி அரசு மருத்துவமனை உணவில் புழுக்கள்-நோயாளிகள் அதிர்ச்சி
தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததால் அது குறித்து மாவட்டக் கலெக்டரிடம் புகார் அளி்க்கப்பட்டது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் சஞ்சய்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 601 வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதே வார்டு பகுதியில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய புதிய தமிழகம் செயலாளர் மற்றும் மனித உரிமை அமைப்பு நிர்வாகி கென்னடி உறவினர் முத்தையாபுரம் சூசைராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்ட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் நோயாளிகளுக்கு சாதம், கீரை கூட்டு, குழம்பு போன்றவை வழங்கப்பட்டன.
இதில் சிறுவன் சஞ்சய்-க்கு வழங்கப்பட்ட உணவில் குறிப்பாக கீரை கூட்டில் பெரிய பெரிய புழுக்கள் நெழிந்ததை பார்த்து அதிர்ச்சியடைதனர்.
இதனையடுத்து அந்த வார்டில் இருந்த கென்னடி புழு இருந்த சாப்பாட்டை அப்படியே தட்டுடன் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய அனுப்பி வைத்தார். இது போன்று நடப்பது முதல் முறையல்ல. இது குறித்து பல முறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications