20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட்ட வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக சிபிஐயால் தேடப்பட்டு வந்த இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த ராஜஸ்ரீ (45) 1991ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தபோது போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
போலி ரேஷன் கார்ட் மூலம் லிங்கம்மா நாராயணசாமி என்ற பெயரில் இவர் போலி பாஸ்போர்ட் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்தது.
ஆனால் அதற்குள் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்ரீ கனடாவில் குடியேறிவிட்டார். இதையடுத்து இவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பிடிபடவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு ராஜஸ்ரீ கனடா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்த கனடா பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அடுத்த இரு வாரங்களில் இவர் நாட்டை விட்டு வெளியேறினார். ராஜிவ் கொலையாளி்களுக்கு இவரது மாமனார் சில உதவிகளை செய்ததாகவும் புகார் உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications