வேலூர் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: 4 பேர் படுகாயம்-ஒருவர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சிறையில் கைதிகள் பயங்கரமாக மோதியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறை உள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த காக்காதோப்பு பாலாஜி, கோழிக்கடை கோவிந்தன் ஆகிய கைதிகள் திடீரென்று மோதிக் கொண்டனர். தகவல் அறிந்த ஜெயில் சூப்பிரண்டு அறிவுடைநம்பி மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று அவர்களை எச்சரிக்கை செய்தனர்.

இந் நிலையில் நேற்றுக் காலை அதிகாலை 6.45 மணிக்கு ரோல்கால் (ஆய்வு) நடந்தது. அப்போது திடீரென காக்காதோப்பு பாலாஜி, பாலமுருகன் மற்றும் விஜயசெல்வம், சக்கரை மற்றும் கைதிகள் திடீரென்று மோதிக் கொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் இரும்பு ராடு, தடி போன்றவற்றால் பயங்கரமாக ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அவர்கள் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஜெயிலில் இருந்த அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து, உயர் அதிகாரிகளும், அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலில் காயம் அடைந்த காக்காதோப்பு பாலாஜி (வயது 35), பாலமுருகன் (30), விஜயசெல்வம் (32), சக்கரை (35) ஆகிய 4 பேரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் விஜயசெல்வத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கைதிகள் மோதல் குறி்த்து சிறைத்துறை டி.ஐ.ஜி. துரைசாமி சென்று நேரில் விசாரணை செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+