சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் என்ஜினீயரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபர் அவரிடமிருந்து பர்ஸ், செல்போன், மோதிரத்தைப் பறித்துச் சென்றார்.
சென்னை தரமணி டைடல்பார்க்கில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் என்ஜினியர் அருள் (25). அவினாசியை சேர்ந்த இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார்.
பறக்கும் ரயில் மூலம் தரமணிக்கு பணிக்கு சென்று வருவார். நேற்று மாலை 5.30 மணியளவில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருள் வந்தபோது கூட்டம் அதிகமில்லை. அப்போது அவரிடம் வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி பர்சை கொடுக்குமாறு மிரட்டினார்.
அருள் பர்சை கொடுக்க மறுத்தவுடன், அவரை அந்த நபர் கத்தியால் குத்தினார். இதையடுத்து அவரிடமிருந்து செல்போன், மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
காயமடைந்த அருள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பே இல்லாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications