2 ஜி: கருணாநிதி குடும்பத்தாரை சி.பி.ஐ கைது செய்ய வேண்டும்-அதிமுக எம்.பி. கே.வி. இராமலிங்கம்
ஈரோடு: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. கே.வி. ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அதன் செயலாளர் செல்வக்குமார் சின்னையன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி. இராமலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசிதாவது,
2ஜி ஸ்பெக்ரம் ஊழல் குறித்து ஒவ்வெரு நாளும் பல்வேறு செய்திகளும், தகவல்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன் கருணாநிதி துணைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இந்த பேச்சுக்கள் பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கருணாநிதியின் குடும்ப டி.வி.-யான கலைஞர் டி.வி.யில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது போல 2 ஜி ஊழலில் சம்பந்தம் உடைய கருணாநியையும், அவரது குடும்பத்தையும் சி.பி.ஐ. விசாரித்து கைது செய்ய வேண்டும்.
2 ஜி ஊழல் இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் ஆகும். ஆனால் பிரமதர் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். தன்னைமீறி ஆ.ராசா செயல்பட்டதாகவும் கூறியுள்ளார். கூட்டணி தர்மத்திற்காக ராசா கொள்ளை அடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கூட்டணி தர்மத்தை காரணம் காட்டி தகுதியற்ற அயோக்கியர்களை மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகே மத்திய அரசு கூட்டுக் குழு விசாரணைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை முன்பே செய்திருந்தால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications