அன்புமணியின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்ட்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை சோதனை நடந்தது. சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவினர் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
முன்னாள் இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி) அதிகாரியான மூர்த்தி, அன்புமணி நலத்துறை அமைச்சரானபோது, அவரது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்புமணிக்கு நெருக்கமான இவர் தனது பதவிக் காலம் முடிந்ததையடுத்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந் நிலையில் இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முறைகேடாக அங்கீகாரம் தந்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சென்னை சேத்துப்பட்டு டாக்டர் குருசாமி சாலை அடுக்கு மாடி குடியிருப்பில் 3வது மாடியில் உள்ள மூர்த்தியின் வீட்டை சோதனையிட சிபிஐ காத்திருந்தது.
ஆனால், மூர்த்தி கடந்த 6 மாதமாகவே அமெரிக்காவில் வசித்து வந்ததால் சோதனைகள் தள்ளிப் போயின. அதே நேரத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டை சிபிஐ பூட்டி சீல் வைத்தது.
நேற்று நள்ளிரவில் மூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவதை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அதிகாலையிலேயே டெல்லியிலிருந்து சென்னை வந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அவர் வந்திறங்கிவுடன் அவரை சுற்றி வளைத்த 5 சிபிஐ அதிகாரிகள் அவரை அழைத்துக் கொண்டு அதிகாலையிலே வீட்டுக்குச் சென்று அவர் முன்னிலையில் வீட்டைத் திறந்து சோதனையை ஆரம்பித்தனர். பிற்பகல் 3 வரை நடந்த இந்தச் சோதனைகளில் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவர் விரைவில் கைதாகலாம் என்றும் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அன்புமணியிடமும் சிபிஐ விசாரணை நடத்துமா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications